சிறந்த நீர்மேலாண்மைக்கான முதல் பரிசு தமிழகத்துக்கு வழங்கப்பட்டது
நாட்டிலேயே சிறப்பான நீர்மேலாண்மைக்கான முதல் பரிசு தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய நீர்வள அமைச்சகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்திடம் இருந்து விருதைப் பெற்றுக்கொண்டார்.
காணொலியில் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, போர்க்கால அடிப்படையில் நீர்ச் சேமிப்பை மக்கள் இயக்கமாகச் செயல்படுத்தாவிட்டால் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும் எனத் தெரிவித்தார்.
Comments