உரம் என்று கூறி விவசாயிகளிடம் சுண்ணாம்புக் கற்களை விற்று ரூ.1.26 கோடி மோசடி

0 7579
உரம் என்று கூறி விவசாயிகளிடம் சுண்ணாம்புக் கற்களை விற்று ரூ.1.26 கோடி மோசடி

பெரம்பலூர் அருகே உரம் என்று கூறி சுண்ணாம்புக் கற்களை விற்று 12 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறுகுடல் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் அதே ஊரை சேர்ந்த ராமலிங்கம், கார்த்திக், துரைக்கண்ணு பாக்டாம்பாஸ் உரம் என்று கூறி ஆயிரத்து 300 மூட்டைகளை 12 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளனர்.

அதை வயல்வெளிகளில் விவசாயிகள் தெளித்த நிலையில், மக்காச்சோள பயிர்கள் திடீரென கருகியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக விசாரித்ததில், உரம் என சுண்ணாம்புக் கல்லை வழங்கிய மோசடியை ஒப்புக்கொண்ட உர விற்பனையாளர்கள் தற்போது பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments