நாட்டின் உற்பத்தித்துறைக்கு ரூ.2 லட்சம் கோடி ஊக்கத்தொகை - நிர்மலா சீதாராமன்
நாட்டின் உற்பத்தித்துறையை உலகளவிலான போட்டிக்கு தயார்படுத்திடும் வகையில், 2 லட்சம் கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
டெல்லியில், பேசிய அவர் வெண்டிலேட்டர், ஏசி, எல்இடி பல்ப், ஸ்டீல், ஜவுளி உள்ளிட்டவற்றின் உற்பத்திக்காக, மருத்துவம், எலக்ட்ரானிக், ஆட்டோமொபைல் உள்ளிட்ட 10 துறைகளின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றார்.
ஜவுளி, உணவுப் பொருள் தயாரிப்பு, பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளும் இந்த ஊக்கத் தொகையைப் பெறும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Comments