நாகர்கோவில் காசி வழக்கில் புதிய திருப்பம் செல்போன்களில் இருந்து அழிக்கப்பட்ட 800க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் மீட்பு

0 14747
நாகர்கோவில் காசி வழக்கில் புதிய திருப்பம் செல்போன்களில் இருந்து அழிக்கப்பட்ட 800க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் மீட்பு

நாகர்கோவில் காசியின் 5 நாள் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில், மீண்டும் அவனை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

சமூக வலைதலங்கள் மூலம் பெண்களை மயக்கி, ஆபாசப் படங்கள் எடுத்து, மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைதானவன் நாகர்கோவில் காசி.

காசியின் வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், அவனது லேப்டாப் மற்றும் மொபைல் போன்களில் இருந்து அழிக்கப்பட்ட 800க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்களையும் போட்டோக்களையும் சைபர்கிரைம் உதவியுடன் மீட்டனர்.

இதனிடையே 5 நாள் போலீஸ் காவல் முடிந்து நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட காசியை மீண்டும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

20 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் புகார் தெரிவிக்கும் பெண்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments