விவசாய நிலங்களில் மலட்டுத்தன்மையைத் தடுப்பதற்கான ஆராய்ச்சிக்கு தமிழக ஆராய்ச்சியாளருக்கு சீனா அரசு ரூ.75.60 லட்சம் நிதியுதவி
விவசாய நிலங்களில் மலட்டுத் தன்மை ஏற்படுவதை தடுப்பதற்கான ஆராய்ச்சிக்காக தமிழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளருக்கு சீன அரசு இந்திய மதிப்பில் 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது.
தென்காசி மாவட்டம் மணலூரைச் சேர்ந்த ராஜேஷ்குமார், சீனாவின் ஹாங்ஜோ (Hangzhou) நகரில் உள்ள ஜெஜியாங் பல்கலைக்கழகத்தில் அணு விவசாய ஆராய்ச்சி பிரிவு ஆராய்ச்சியாளராக உள்ளார்.
இந்த நிலையில் விவசாய நிலங்களில் கழிவுகள் வினைமாற்றத்தை மண்ணிற்குள்ளேயே கட்டுப்படுத்தி மலட்டுத் தன்மை ஏற்படாதவாறு தடுப்பது குறித்த இவரின் திட்ட அறிக்கையை அங்கீகரித்து சீன அரசு 75 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.
Comments