நெட்டிசன்களின் கேலிக்குள்ளான எரிக் டிரம்பின் டுவிட்டர் பதிவு
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்து, முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், மக்களை வாக்களிக்க வலியுறுத்தி டொனால்டு டிரம்பின் மகன் எரிக் டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டது கேலிக்குள்ளாகி வருகிறது.
நவம்பர் 3ம் தேதியே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று எரிக் டிரம்பின் டுவிட்டர் பக்கத்தில் “மினசோட்டா மாகாண மக்களே, வெளியே சென்று வாக்களியுங்கள்” என்ற பதிவு வெளியானது.
இது சில நிமிடங்களில் நீக்கப்பட்டபோதும், அதற்குள்ளாக ஸ்கிரீன்சாட் எடுத்த நெட்டிசன்கள் அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, எரிக் டிரம்பை கேலி செய்து வருகின்றனர்.
Donald Trump's son tweeted for people in Minnesota to "get out and vote" one week after the 2020 election. https://t.co/pGSAqPFonD
— HuffPost (@HuffPost) November 10, 2020
Comments