நாமக்கல் எம்.பி. வைத்த டெஸ்ட் ; பெயிலான 'மினி' டாக்டர்! - போலி நோயாளிகளால் சிக்கினார்

0 12728

நாமக்கல்லில் 8 ஆம் வகுப்பு படித்து விட்டு கிளினிக் நடத்தியவரை நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் கையும் களவுமாக பிடித்தார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகேயுள்ள ஆவத்திபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் என்பவர் 8 ஆம் வகுப்பு படித்து விட்டு, தன் வீட்டிலேயே கிளினிக் வைத்து நடத்தி வந்துள்ளார். மருந்து மாத்திரைகளை எழுதி கொடுக்க புஞ்சைபுளியம்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர். செல்வம் என்பவரின் லெட்டர் பேடை பயன்படுத்தி வந்துள்ளார். சுற்றுவட்டாரப் பகுதியில் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஊசி போடுவது , மாத்திரைகள் வழங்குது என்று ஒரு மினி டாக்டராகவே தங்கராஜ் செயல்பட்டு வந்துள்ளார்.

தங்கராஜ் பற்றி நாமக்கல் தொகுமி எம்.பி ஏ கே பி சின்ராஜுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தொடர்ந்து, எம்.பி சின்னராஜ், தன் ஆதரவாளர்கள் 3 பேரை நோயாளிகள் போலவே தங்கராஜிடத்தில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். தங்கராஜூம் டெதஸ்கோப் வைத்து நோயாளிகளின் இதயதுடிப்பு கண்டறிந்து மருந்து மாத்திரைகள் கொடுத்து அனுப்பியுள்ளார்.தொடர்ந்து, தங்கராஜ் ஒரு டாக்டர் போலவே செயல்படுவதாக சின்ராஜ் எம்.பியிடத்தில் அவர் அனுப்பிய போலி நோயாளிகள் உறுதி அளித்தனர்.

இதையடுத்து, தங்கராஜ் வீட்டுக்குள் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அதிரடியாக புகுந்த சின்ராஜ் எம்.பி அவரிடத்தில் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் தங்கராஜ் போலி மருத்துவர் என்பது தெரிய வந்தது. 8 ஆம் வகுப்பு வரை படித்து விட்டு மருத்துவம் பார்த்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, பள்ளிபாளையம் போலீஸார் தங்கராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது குறித்து டாக்டர். செல்வத்திடம் விசாரித்த போது, அரசு பணி கிடைப்பதற்கு முன்பு ஆவத்திபாளையத்தில் 15 ஆண்டுகளாக கிளினிக் நடத்தினேன். அப்போது, தன்னிடத்தில் தங்கராஜ் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். ஆனால், அவர் தனியாக கிளினிக் நடத்துது குறித்து தனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார்.

முள்ளை முள்ளால் எடுப்பது போல, போலி நோயாளிகளை வைத்தே  போலி டாக்டரை பிடித்தது நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments