கிழக்கு லடாக்கில் ஒருவிதமான நிலைத்தன்மை காணப்படுகிறது - எம்எம் நரவணே
கிழக்கு லடாக்கில் உள்ள எல்லையில் தற்போது ஒரு நிலைத்தன்மை காணப்படுவதாக ராணுவ தளபதி எம்எம் நரவணே தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு மற்றும் ராணுவ விவகாரங்களை கையாளும் இணையதளம் ஒன்று நடத்திய கருத்தரங்கில் பேசிய அவர், கட்டுப்பாட்டு எல்லையில் பதற்றத்தை குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் இந்திய-சீன ராணுவ கமாண்டர்கள் தொடர்ந்து பேசி வருவதாக தெரிவித்தார்.
பதற்றத்தை தணிப்பதற்கான முடிவுகள் இந்த பேச்சுவார்த்தைகளின் வாயிலாக எட்டப்படும் எனவும் அவர் கூறினார். கடந்த வெள்ளிக்கிழமை இருதரப்பு கமாண்டர்கள் மட்டத்திலான எட்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது.
அதில் இரு நாடுகளும் படைகளை விலக்கிக் கொள்ள ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.
Comments