11 மாநிலங்களில் 59 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைதேர்தலில் 40ல் பாஜக வெற்றி
11 மாநிலங்களில் காலியாக இருந்த 59 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைதேர்தலில் 40ல் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற 28 தொகுதிகளுக்கான இடைதேர்தலில் 19 இடங்களை கைப்பற்றி, சிவராஜ் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி பெரும்பான்மையை பெற்றுள்ளது.
இதேபோல், குஜராத் மாநிலத்தில் இடை தேர்தல் நடைபெற்ற 8 தொகுதிகளையும், உத்தரபிரதேசத்தில் 7ல் 6 தொகுதிகளையும், மணிப்பூரில் 5ல் 4 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியுள்ளது. கர்நாடகாவில் 2 தொகுதிகளிலும், தெலங்கானவில் ஒரு தொகுதியிலும், பாஜக வெற்றி பெற்றுள்ளது.
Comments