பீகார் மக்கள் வளர்ச்சிக்கு வாக்களித்துள்ளனர் - பிரதமர் மோடி

0 2047
பீகார் மக்கள் வளர்ச்சிக்கு வாக்களித்துள்ளனர் - பிரதமர் மோடி

பீகார் மக்கள் வளர்ச்சிக்கு வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அனைத்து பகுதிகளுக்கும் வளர்ச்சியை ஏற்படுத்தித் தர உறுதியளித்துள்ளார்.

பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ததையடுத்து பிரதமர் மோடி டிவிட்டரில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பீகார் மக்கள் வளர்ச்சியை எதிர்நோக்கி பாஜக கூட்டணிக்கு மகத்தான வெற்றியை அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள மோடி, அனைத்துப் பகுதி மக்களுக்கும் வளர்ச்சியைக் கொண்டு வர உறுதியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதே போன்று, பாஜக கூட்டணிக்கு வெற்றியை அளித்த பீகார் மக்களுக்கு மத்திய அமைச்சர்கள் அமித் ஷா ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சியினர் தோல்வியை ஏற்றுக் கொண்டு மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்திய ரவிசங்கர் பிரசாத், பீகாரின் வளர்ச்சி இல்லாமல் இந்தியாவின் வளர்ச்சி முழுமையடைய முடியாது என்று தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments