மார்ச் தேதிக்குள் வங்கி கணக்குகளுடன் ஆதார் எண் இணைத்திருக்க வேண்டும் என வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சர் வலியுறுத்தல்

0 1946

டுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் அனைத்து வங்கிக் கணக்குகளுடனும், பயனாளர்களின் ஆதார் எண்ணை இணைத்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என, வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் 73-ஆவது ஆண்டுக் கூட்டத்தில் பேசிய அவர், அரசு நலத்திட்டங்களில் போலி பயனாளர்கள் இல்லை என்பதை உறுதி செய்ய, வங்கி கணக்குகளுடன் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்க வேண்டும் என கூறினார்.

மேலும், பொதுமக்களிடையே டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை வங்கிகள் ஊக்குவிக்க வேண்டும் எனவும் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments