பீகாரில் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுக்க வாய்ப்பு
பீகாரில் முதல் முறையாக தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
பீகார் வாக்கு எண்ணிக்கையில், இதுவரையிலான முன்னணி நிலவரங்களின்படி, பாஜக 70-க்கும் மேற்பட்ட இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் 40-க்கும் மேற்பட்ட இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இதேபோல, ராஷ்ட்ரீய ஜனதா தளம் 60-க்கும் மேற்பட்ட இடங்களிலும் காங்கிரஸ் 20-க்கும் மேற்பட்ட இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும், ஐக்கிய ஜனதா தளம் 122 இடங்களிலும் பாஜக 121 இடங்களிலும் போட்டியிட்டன. இந்த அடிப்படையில் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளத்தின் கை ஓங்கியிருந்தது.
ஆனால் தற்போது கூட்டணியில் பாஜக அதிக இடங்களில் முன்னிலையில் இருப்பதால், பீகாரில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. கூட்டணியில் பாஜகவின் கை ஓங்கினால் முதலமைச்சர் பதவியை தீர்மானிப்பது, அமைச்சரவை இலாகா ஒதுக்கீடுகளில் அந்த கட்சியின் கை ஓங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments