தமிழகத்தில் சுமார் 7 மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள் மீண்டும் திறப்பு...பழைய படங்கள், பிற மொழி திரைபடங்கள் காட்சி
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டு இருந்த திரையரங்குகள், சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளன.
மார்ச் 17-ந் தேதி திரையரங்குகள் மூடப்பட்டு காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் 50 சதவீத இருக்கைகளோடு திரையரங்குகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு இருப்பதால், சென்னை திரையரங்குகளில் 2 இருக்கைகளுக்கு நடுவே உள்ள இருக்கையில் ரிப்பன் கட்டப்பட்டுள்ளது.
எனினும், கொரோனா அச்சுறுத்தல் காரணத்தால் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்கள் வராததால் கூட்டம் குறைவாகவே இருந்தது. பழைய படங்கள், மற்றும் பிற மொழி படங்கள் மட்டும் திரையிடப்பட்டு வருகிறது.
சென்னையில் பெரும்பாலான இடங்களில் காலை காட்சிகள் திரையிடப்படவில்லை.
Comments