அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்களை வெளியிட்டது காவேரி மருத்துவமனை
வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு மரணத்தில் மர்மம் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்களை காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ளது.
ரத்த அழுத்தம், நீரிழிவு, இருதய சம்பந்தமாக பிரச்சனையுடன் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சி.டி. ஸ்கேன் மூலம் கொரோனா உறுதி செய்யப்பட்டு, ரெம்டிசிவர், Dexamethasone, dalteparin ஆகிய மருந்துகளை கொண்டு கிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 21-ம் தேதி வெண்டிலேட்டர் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அடுத்த ஓரிரு நாட்களில் நுரையீரல் தொற்று 90 சதவீத அளவுக்கு அதிகரித்து முக்கிய உறுப்புகள் செயழிலக்க தொடங்கியதால் உயிர் காக்கும் எக்மோ கருவி பொருத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், 25-ம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், 31-ம் மருத்துவ குழுவின் சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்காமல் போகவே, இரவு 11.15 மணியளவில் உயிர் பிரிந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments