கொரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையில், தொற்று பாதித்ததால் பிசியோதெரபிஸ்ட் தற்கொலை - நாமக்கல்லில் அதிர்ச்சி!
கொரோனா பாதிப்பு குறைந்துவரும் சூழலில், சாதாரண மக்கள் கொரோனாவுக்கு எதிராகப் போராடிவரும் நிலையில், நாமக்கல் அருகே கொரோனோ தொற்று உறுதியானதால் பிசியோதெரபி மருத்துவர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவர் பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் பிசியோதெரபி மருத்துவராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி உமாபதி, திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு 10 -ம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் இருக்கிறார். உமாவின் சொந்த ஊரான செம்பட்டி அருகேயுள்ள மல்லையாபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.
இதற்கிடையே, பெங்களூரில் பணியாற்றி வந்த சின்னசாமி நேற்று முன்தினம் தனக்கு கொரோனோ தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், வீட்டுக்குப் புறப்பட்டு வருவதாக தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார். பெங்களூரிலிருந்து இருசக்கர வாகனத்திலேயே சின்னாளப்பட்டி அருகேயுள்ள செட்டியபட்டிக்கு வந்த சின்னசாமி தன் வீட்டுக்குச் செல்லாமல் ரயில்வே கேட்டுக்கு சென்றார்.
‘எனக்கு கொரோனோ பாதிப்பு உள்ளதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். இதனால் எனது உடலும் மனமும் சோர்வடைந்து விட்டது. எனவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன். என் சாவுக்கு யாரும் காரணமில்லை. எனக்காக யாரும் அழ வேண்டாம். தேவையான அளவுக்கு நானே அழுது விட்டேன்' என்று வருத்தத்துடன் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தைத் தனது செல்போனுடன் இருசக்கர வாகனத்தில் வைத்துவிட்டு, அந்த வழியாக வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் கிடைத்துவந்த ரயில்வே போலீசார் சின்னசாமியின் உடலைத் திண்டுக்கல் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனோ தொற்றால் பிசியோதெரபி மருத்துவரே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையில், தொற்று பாதித்ததால் பிசியோதெரபிஸ்ட் தற்கொலை - நாமக்கல்லில் அதிர்ச்சி! #Namakkal #COVID19 #Suicide https://t.co/Ff2euu9BtG
— Polimer News (@polimernews) November 10, 2020
Comments