டோக்லாமில் சீனா அமைக்கும் சாலை...குளிர் காலத்தில் துருப்புக்களை அனுப்ப ஏதுவாக சாலை என தகவல்

0 2253
டோக்லாமில் சீனா அமைக்கும் சாலை...குளிர் காலத்தில் துருப்புக்களை அனுப்ப ஏதுவாக சாலை என தகவல்

ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த டோக்லாம் பீடபூமியை எல்லா பருவநிலையிலும் அணுக ஏதுவாக, அங்கு சீனா  சுரங்கத்துடன் கூடிய சாலை அமைப்பது செயற்கைக் கோள் படங்கள் வாயிலாக தெரிய வந்துள்ளது.

குளிர் காலத்தில் டோக்லாம் பீடபூமி முழுதும் பனியால் மூடப்படும் என்பதால், தனது படைகளின் நடமாட்டத்தை எந்த தடங்கலும் இன்றி நடத்த சீனா இந்த கட்டுமானத்தை மேற்கொள்வதாக பாதுகாப்பு தொடர்பான வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

டோக்லாம் பீடபூமிக்கு சீனாவும், பூட்டானும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. பூட்டானை இந்தியா ஆதரிக்கும் நிலையில், அங்குள்ள சிக்கன் நெக் எனப்படும் மிகவும் குறுகலான பகுதிக்கு அருகே கடந்த 2017 ல் சீனா சாலை போடுவதை இந்தியா தடுத்தது.

இதனால் இரு தரப்பு வீரர்கள் 70 நாட்களுக்கும் மேலாக நேருக்கு நேர் நின்றதால் பதற்றம் ஏற்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments