சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு பெண் உள்பட 6 மாவோயிஸ்ட் போராளிகள் கைது

0 1013
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு பெண் உள்பட 6 மாவோயிஸ்ட் போராளிகள் கைது

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு பெண் நக்ஸலைட் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள தாமவரம் வனப்பகுதியில் கூட்டுப் பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் மறைந்திருந்த நக்ஸலைட்டுகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.

இதனையடுத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டினைத் தொடர்ந்து அங்கு பதுங்கியிருந்த யுகா லக்கி என்ற பெண் போராளி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் பசகுடா என்ற இடத்தில் 3 மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments