கட்டாக்கில் வருமானவரித் துறை தீர்ப்பாய புதிய அலுவலகம்...நாளை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

0 989
கட்டாக்கில் வருமானவரித் துறை தீர்ப்பாய புதிய அலுவலகம்...நாளை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

ஓடிசா மாநிலம் கட்டாக்கில் வருமானவரித்துறை தீர்ப்பாயத்தின் அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகத்தை பிரதமர்  மோடி நாளை மாலை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

விழாவில் மத்திய அமைச்சர்கள், ஒடிசா முதலமைச்சர்,  ஒடிசா தலைமை நீதிபதி மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். 

இந்த ஐடிஏடி கட்டாக் அமர்வு 1970-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, கடந்த 50 ஆண்டுகளாக வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்தது. தற்போது இந்த  புதிய அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகம், 1.60 ஏக்கரில் நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments