பல மாதங்களுக்குப் பின் தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் இன்று திறப்பு
கொரோனா பரவலால் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள் 8 மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன.
திரையரங்குகளைத் திறக்க 50 சதவீத இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் விபிஎஃப் கட்டணத்தை ரத்து செய்யாவிட்டால், புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதால், புதிய பட வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால், இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களை மீண்டும் வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கான இணையவழி முன்பதிவு சில திரையரங்குகளில் மட்டும் தொடங்கியுள்ளது.
திரையரங்குக்கு வரும் பார்வையாளர்கள் அனைவரும் முகக் கவசம் உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சுமார் 900த்திற்கும் மேற்பட்ட திரையரங்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments