பீகார் தேர்தலில் வெற்றி யாருக்கு?
பீகார் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, இன்று காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. அங்கு ஆட்சியைப் பிடிப்பது யார் என்பது நண்பகல் வாக்கில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
243 இடங்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி, ராஷ்ட்ரிய ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணி, சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி என மும்முனைப் போட்டி நிலவியது.
மூன்று கட்டத் தேர்தலில் மொத்தம் 57 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. 38 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 55 மையங்களில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. பிற்பகலுக்குள் பெரும்பாலான முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவப் படைவீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அசம்பாவிதங்களைத் தவிர்க்க வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு முகக்கவசம் அணிந்து வரவேண்டும் எனவும், சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
Comments