முகக்கவசம் அணியாதவர்களுக்கு “ஆப்பு” வைக்கும் “ஆப்” : அரைகுறையாக முகக்கவசம் அணிந்தவர்களை படம் பிடித்து காட்டிக் கொடுக்கும்

0 4932

துரையில் முகக்கவசம் அணியாதவர்கள், அரைகுறையாக முகக்கவசம் அணிந்திருப்பவர்களை அடையாளம் காணும் வகையில் போலீசாருக்கு உதவும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  

ஃபர்ஸ்ட் சூம் ஆப் ( First Zoom App ) என்ற அந்த செயலி சிசிடிவி கேமராக்களோடு இணைக்கப்பட்டிருக்கும். முதற்கட்டமாக 29 சிசிடிவி கேமராக்கள் இந்த செயலியோடு இணைக்கப்பட்டுள்ளதாகக் கூறும் போலீசார், முகக்கவசம் அணியாதவர்கள், அரைகுறையாக முகக்கவசம் அணிந்திருப்பவர்களை படம் பிடித்து தங்களுக்கு தெரியப்படுத்தும் என்கின்றனர்.

உடனடியாக அந்தப் பகுதி காவலர்கள் சம்மந்தப்பட்ட நபரை அணுகி அபராதம் விதிப்பார்கள். அத்துடன், கூர்மையான ஆயுதங்கள் வைத்திருப்பவர்கள், பழைய குற்றவாளிகள் உள்ளிட்டோர் குறித்தும் தகவல் அனுப்பி இந்த செயலி எச்சரிக்கும் என்கின்றனர் போலீசார். பல்வேறு வகைகளில் இந்த செயலி காவல்துறைக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் போலீசார் கூறுகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments