இந்தியாவுக்குள் ஆயுதங்களை கடத்த பாகிஸ்தான் உளவுத்துறை திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை தகவல்
காலிஸ்தான் பயங்கரவாதிகள் மூலம் இந்தியாவுக்குள் ஆயுதங்களை கடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அப்பால் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் உளவுத்துறை பயிற்சி அளிப்பதாக இந்திய உளவுத்துறை கூறியுள்ளது.
எல்லையை கடந்து ஊடுருவுவதற்காக புதிய வழிகளை தேடும் பணியில் பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் பல மாநிலங்களை ஒட்டி உள்ள சர்வதேச எல்லை வழியாக ஆயுதங்களை கடத்த திட்டமிட்டுள்ள பாகிஸ்தான், இதற்காக காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை பயன்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments