ரிலையன்சின் 20 விழுக்காடு பங்குகளை வாங்க சவூதி அராம்கோ நிறுவனம் பேச்சு

0 2061

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 20 விழுக்காடு பங்குகளை சவூதி அராம்கோ நிறுவனத்துக்கு விற்பதற்கான பேச்சு மீண்டும் வேகமெடுத்துள்ளது.

அந்த நிறுவனத்தின் 20 விழுக்காடு பங்குகளை வாங்க சவூதி அராம்கோ நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்டில் இருந்தே பேச்சு நடத்தி வந்தது.

மார்ச் மாதத்தில் உடன்பாடு எட்ட முடிவு செய்திருந்த நிலையில் கொரோனா சூழலால் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் பங்கு விற்பனைக்கான பேச்சு மீண்டும் வேகமெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உடன்பாடு எட்டுவதில் இரு நிறுவனங்களும் உறுதியாக உள்ளதாகவும், ரிலையன்ஸ் தொழில் நிறுவனங்களைப் பார்வையிட்டு மதிப்பிட சவூதி அராம்கோ விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments