சுஷா நகரை கைப்பற்றியதாக அசர்பைஜான் தகவல்.. அர்மீனியா மறுப்பு..!

0 991
நாகோர்னா காராபாக் பிராந்தியத்தின் முக்கிய நகரமான சுஷாவை அசர்பைஜான் ராணுவம் கைப்பற்றி உள்ளது.

நாகோர்னா காராபாக் பிராந்தியத்தின் முக்கிய நகரமான சுஷாவை அசர்பைஜான் ராணுவம் கைப்பற்றி உள்ளது.

நாகோர்னா-காராபாக் பிராந்தியம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக அசர்பைஜான், அர்மேனியாஇடையே கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இருந்து கடுமையான சண்டை நடந்து வருகிறது.

இந்தநிலையில் நாகோர்னா காராபாக் பிராந்தியத்தின் முக்கிய நகரமான சுஷாவை அசர்பைஜான் ராணுவம் கைப்பற்றியது. அசர்பைஜானின் அதிபர் இல்ஹாம் அலியேவ் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்தார்.

ஆனால் இதனை அர்மேனியா ராணுவம் முற்றிலுமாக மறுத்துள்ளது. சுஷா சூசா நகரில் இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருவதாக அர்மேனியா ராணுவம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments