கல்லூரி,பல்கலைக் கழக விடுதிகளை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

0 6648
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் விடுதிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் விடுதிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த அறிக்கையில், ‘மாணவர்கள் தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்பதால் விடுதிகளில் கடும் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும், கல்லூரிகள் திறக்கப்பட்டதும் வரும் விடுதி மாணவர்கள், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா இல்லை என சான்றிதழ் கொண்டு வந்தாலும் கட்டாயம் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்க வைக்கப்படவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வருகிற 16-ஆம் தேதி முதல் கல்லூரிகளை திறக்கலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments