தேர்தலில் வெற்றிபெற விடாமல் செய்வதற்காகத் தன் மீதான வழக்கு இழுத்தடிக்கப்படுகிறது -செந்தில் பாலாஜி

0 1857
சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற விடாமல் செய்வதற்காகத் தன் மீதான வழக்கை இழுத்தடித்து வருவதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற விடாமல் செய்வதற்காகத் தன் மீதான வழக்கை இழுத்தடித்து வருவதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி 81 பேரிடம் மொத்தம் ஒரு கோடியே 62 லட்ச ரூபாய் மோசடி செய்ததாகக் கூறிப் பாதிக்கப்பட்டோர் புகார் அளித்தனர்.

இந்த வழக்கில் சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்தியக் குற்றப்பிரிவில் செந்தில் பாலாஜியிடம் இன்று 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன்னைக் குற்றவாளியாகக் காட்டவேண்டும் என்பதற்காகவே விசாரணையை இழுத்தடித்து வருவதாகக் குற்றஞ்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments