2021-2022 முதல் 2025-2026 : அடுத்த 5 நிதியாண்டுகளுக்கான பரிந்துரைகளைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் நிதிக்குழுவினர் வழங்கினர்

0 2033

15ஆவது நிதிக்குழு அடுத்த ஐந்து நிதியாண்டுகளுக்கான தனது பரிந்துரைகளைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் வழங்கியது.

என்.கே.சிங்கைத் தலைவராகக் கொண்ட இந்தக் குழுவினர் 2021-2022 முதல் 2025-2026 வரையான 5 நிதியாண்டுகளுக்கான பரிந்துரைகள் அடங்கிய கோப்புகளை இன்று டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் வழங்கினர்.

வரிச் சீர்திருத்தம், உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி, பேரிடர் மேலாண்மை நிதி ஆகியன குறித்த பரிந்துரைகள் இதில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments