கோழிப்பண்ணைகளில் மூட்டை மூட்டையாக வெங்காயம் பதுக்கல்; 440 டன் வெங்காயம் பறிமுதல்..!
பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் பயன்பாட்டில் இல்லாத கோழிப்பண்ணைகளில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 440 டன் பெரிய வெங்காயம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
வெங்காய பதுக்கல் குறித்து தகவல் அறிந்து, திருச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர், திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆலத்தூர் வட்டம் இரூர், கூத்தனூர், சத்திரமனை, மங்கூன் உள்ளிட்ட கிராமங்களில் பழைய கோழிப்பண்ணைகளில் மூட்டை, மூட்டையாக வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பள்ளக்காட்டுப்புதூர் பாலாஜி என்ற வெங்காய வியாபாரி உள்ளிட்ட 4 பேரை கைது செய்த குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர், சத்திரமனை கிராமத்தில் வெங்காய மூட்டைகளுடன் ஒரு லாரியை பறிமுதல் செய்தனர்.
Comments