பீகார் காற்று...யார் பக்கம் வீசும்?
3 கட்டங்களாக நடந்து முடிந்த பீகார் தேர்தலில் நாளை வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. நாளையே பெரும்பாலான முடிவுகள் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பது எது என்பது குறித்த ஒரு அலசல் பார்வை.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் மாநிலத்தில் நிலவும் பெருமளவிலான வேலையில்லா திண்டாட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாகவே எல்லா அரசியல் கட்சிகளும், வளர்ச்சித் திட்டங்களை முன்னிறுத்தாமல் வேலைவாய்ப்புகளை தருவதாக உறுதி அளித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டன.
அதில் உச்சபட்சமாக 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக ராஷ்டிரீய ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி வாக்குறுதி அளித்துள்ளது. அதே சமயம்19 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்குவதாக பாஜக கூட்டணியும் பிரச்சாரம் செய்தது.
அதற்கான வழிமுறைகள் தங்களிடம் இருப்பதாகவும், ஆனால் ஆர்ஜேடி கூட்டணி இளைஞர்களை ஏமாற்றுவதாகவும் பாஜக கூட்டணி சார்பில் பிரச்சாரம் செய்யப்பட்டது.
பீகாரின் 7.29 கோடி வாக்காளர்களில் 50 சதவிகித த்திற்கும் அதிகமானவர்கள் 18 முதல் 39 வயதிற்கு இடைப்பட்டவர்கள் ஆவர். இந்த தேர்தலில் இவர்கள் அரசியல் கட்சிகளின் தலைவிதியை முடிவு செய்யும் இடத்தில் இருப்பதால் இரண்டு கூட்டணிகளும், வேலைவாய்ப்பு என்ற அஸ்திரத்தை கையில் எடுத்த தாக கூறப்படுகிறது.
வாக்காளர்களில் 18,19 வயதானவர்களும் அதிகம் உள்ளனர். இவர்களுக்கு முந்தைய லாலு-ராப்ரி தேவியின் ஆட்சிகளின் மோசமான சம்பவங்கள் தெரியாது.
69 வயதான நிதிஷ் குமாரா, 31 வயதாகும் ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவா, யார் முதலமைச்சர் என்பது 24 மணி நேரத்தில் தெரிந்து விடும் என எதிர்பார்க்கலாம்.
Comments