தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள்.! பீகாரில் பூரணத்துவம் பெற்றதா?
தமிழ்நாட்டில், பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, நடைமுறையில் உள்ள பல மக்கள் நலத் திட்டங்களை, பீகாரும் செயல்படுத்தி வருகிறது. இருப்பினும், தமிழகத்தை போன்று, அது பூரணத்துவம் பெற்றிருக்கிறதா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக தொடர்கிறது.
பீகார், கனிம வளங்களையும், பெருமளவிலான வேளாண் நிலங்களையும் கொண்ட பூமி. இம்மாநிலத்தின் பிரதான தொழில், விவசாயமாக தான் உள்ளது.
தலைநகர் பாட்னா தவிர, தேசிய அளவில், பெயர் அடிபடும் அளவிற்கான பெருநகரங்கள் பீகாரில் இல்லை என்பதை பொறுத்தே, அம்மாநிலத்தின் வளர்ச்சி குறியீட்டை நாம் கணிக்கலாம்.
சாதிய, மத மோதல்களால், பதற்றமான பகுதிகளாவே, பீகாரின் பல இடங்கள் திகழ்ந்ததால், தொழில்வளம் சொல்லிக் கொள்ளும்படியாக முன்னேறவில்லை.
பீகாரில், சாதிய, மத மோதல் உள்ளிட்ட வன்முறைகளுக்கு பெருங்காரணமாக இருந்த மது விற்பனைக்கு நிதிஷ்குமார் முடிவு கட்டினார்.
பீகாரின் சூழலை சற்று மாற்றியமைக்க எண்ணிய நிதிஷ்குமார், தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் நலத்திட்டங்களை போன்ற திட்டங்கள் அங்கு செயல்படுத்த தொடங்கினார்.
பெண் கல்வியை ஊக்குவிக்கவும், இடைநிற்றலை தடுக்கவும், மாணவிகளுக்கு, இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் பீகாரில் அறிமுகமானது.
பள்ளி மாணவர்களுக்கு, கையடக்க கணினி எனப்படும் இலவச டேப்லெட்டுகள், பீகாரில் வழங்கப்படுகின்றன.
பீகாரின் மனித வளம் சற்று தனித்துவமானது. பல்வேறு ரிஸ்கான கட்டுமான பணிகளில், உயிரை பணயம் வைத்து, ஒரு ஜான் வயிற்றுக்காக, உழைக்கும் பீகாரிகளின் எண்ணிக்கை, லட்சோபலட்சம்...
பீகார் மாநிலத்தின் தற்போதைய தலையாய கோரிக்கையாக, பிரச்சனையாக மாறியிருப்பது, வேலைவாய்ப்பு என்கின்றனர்....
கொரோனா ஊரடங்கால், பல்வேறு சிரமங்களுக்கிடையே ஊர் திரும்பிய பீகார் தொழிலாளர்கள், மீண்டும், அவரவர் பணியிடங்களுக்கு திரும்ப போதுமான நடவடிக்கை எடுக்கப்படாத ஆதங்கள் பரவலாகவே காணப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்விக்காக, நிதிஷ்குமார் அரசு, வாரியிறைத்திருக்கிறது. இருப்பினும், கல்வி வளர்ச்சி மற்றும் படிப்பறிவு விகிதம் பின்தங்கியே இருக்கிறது.
பீகார் மாநில பெண்களில், 50 விழுக்காட்டிற்கும் அதிகமானோர், எழுத-படிக்கத் தெரியாதவர்களாக இருப்பதாக புள்ளிவிவரம் கூறுகிறது.
தமிழ்நாட்டில், கிராமப்புறங்கள், நகர்புறங்கள் என்ற பேதமின்றி, தேவைக்கேற்ப, விருப்பதிற்கு ஏற்ப, கல்வி கற்கும் சூழல் உள்ளது. ஆனால், பீகாரில், நகரங்களில் வசிப்பவர்கள் மட்டுமே, அதிக மற்றும் நல்ல கல்வியறிவு பெறுபவர்களாக இருக்கின்றனர்.
நாட்டிலேயே தமிழ்நாட்டில் இருப்பது போன்ற, குடும்பக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வோ, அதுகுறித்த தாக்கமோ இல்லததால், பீகாரில் மக்கள் தொகை பெருக்கம் அதிகம்.
எனவே, தமிழ்நாட்டில் ஒரே இடத்தில், அனைத்து வாய்ப்புகளும் குவிந்திடாமல், பரவலாக இருப்பது போன்று, பீகாரில் இல்லை என்பதும், அம்மாநிலத்தில் அவ்வாறான சூழலை ஏற்படுத்த, பல பத்து ஆண்டுகள் ஆகலாம் என்பதுமே, கள எதார்த்தம்.!
தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள்.! பீகாரில் பூரணத்துவம் பெற்றதா? | #BiharElection2020 | #BiharPolls | #TejaswiYadav | #LaluPrasadYadav | #NitishKumar | #TamilNadu
— Polimer News (@polimernews) November 9, 2020
https://t.co/UkZ8cFjknv
Comments