ஆன்மீகத்தில் ஈடுபட்டால் ரஜினியின் ஆயுள் அதிகமாகும்; அரசியலில் ஈடுபட்டால் குறையும்!- பிரபல ஜோதிடர் கணிப்பு

0 3303

ஜினி ஆன்மீகத்தில் மட்டும் ஈடுபட்டால், இன்னும் 16 ஆண்டுகளுக்கு ஆயுள் கெட்டியாகவுள்ளதாக கன்னியாகுமரியை சேர்ந்த பிரபல ஜோதிடர் சாந்தகுமார் கணித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா... இல்லையா என்பது குறித்து கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதிடர் சாந்த குமார் கூறியதாவது, '' நான் கடந்த 22 ஆண்டுகளாக ஜாதகம் பார்த்து வருகிறேன்.  தற்போது நடிகர் ரஜினிகாந்தின் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்தேன்.

image

அதன்படி , வரும் டிசம்பர் மாதத்திலிருந்து 3 வருடங்கள் அவருக்கு மிகவும் கெட்டகாலம். எந்த சூழ்நிலையிலும் அவர் அரசியலில் ஈடுபடக்கூடாது. வீட்டிலிருந்தபடி ஓய்வு எடுத்து ஆன்மிகத்தில் ஈடுபட்டால் இந்த கண்டத்தை தாண்டலாம். அரசியலுக்கு வந்தால் அவர் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். அதுமட்டுமில்லாமல் மிகப்பெரிய எதிரி கூட்டமும் அவருக்கு உருவாகும். ரஜினி வீட்டிலிருந்து ஓய்வு எடுத்து ஆன்மிகத்தில் ஈடுபட்டால் இந்த பூமியில் இன்னும் 16 ஆண்டு காலம் அவர் சந்தோஷமாக வாழலாம்.

ரஜினியின் மகர ராசி, சிம்ம லக்னத்துக்கு டிசம்பர் மாதத்தில் சனி பெயர்ச்சி வருகிறது. இதனால், அவருக்கு உடல் உபாதைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கட்சி ஆரம்பித்து வீதி வீதியாக சென்றால் உடல் நிலை மிகப் பெரிய கேள்விக் குறியாகிவிடும். கடந்த 2010 ஆம் ஆண்டு இதுபோன்ற ஒரு  நிலை அவருக்கு ஏற்பட்டது. அதேபோல், 2020 ம் ஆண்டு மீண்டும் ரஜினிக்கு அப்படி ஒரு நிலை ஏற்பட வாய்ப்புள்ளது'' என்று தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments