பிரபல நடிகர் அர்ஜூன் ராம்பாலின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 3 இடங்களில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை

0 1555
போதை பொருள் வழக்கில், மும்பையிலுள்ள பிரபல இந்தி நடிகர் அர்ஜூன் ராம்பாலின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 3 இடங்களில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

போதை பொருள் வழக்கில், மும்பையிலுள்ள பிரபல இந்தி நடிகர் அர்ஜூன் ராம்பாலின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 3 இடங்களில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தி நடிகர் சுசாந்த் சிங் மர்ம மரணம் தொடர்புடைய போதைப் பொருள் வழக்கில், அவருடைய காதலி ரியா, சகோதரர் சவிக் கைது செய்யப்பட்டனர்.

திரைப்பட தயாரிப்பாளர் பெரோஸ் நாடியாவாலாவின் மனைவி சபனா சயீத் (Shabana Saeed) நேற்று கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து பெரோஸ் நாடியவாலாவிடம் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே நடைபெற்ற விசாரணையில், ரியாவுக்கு போதை பொருள் சப்ளை செய்தோருடன் ராம்பாலின் காதலி கேப்ரியலாவின் (Gabriella) சகோதரர் அஹிசிலோஸ் டிமிட்ரியாடஸ் (Agisilaos Demetriades) தொடர்பு வைத்திருந்ததை கண்டுபிடித்து கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments