கோழிப்பண்ணைகளில் 440 டன் பெரிய வெங்காயம்... மாவட்ட ஆட்சியர் அதிரடியால் 'பணபிரியர்கள்' கலக்கம்

0 13348

பெரம்பலூர் மாவட்டத்தில் மூடப்பட்ட கோழிப்பண்ணைகளிலிருந்து மூட்டை மூட்டையாக வெங்காயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்தில் இரூர், நாட்டார்மங்கலம், செட்டிகுளம், பொம்மனாப்பாடி, சத்திரமனை, மங்கூன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மூடப்பட்ட கோழிப் பண்ணைகளில் பெல்லாரி எனப்படும் பெரிய வெங்காயம் பதுக்கப்பட்டுள்ளதாக வேளாண் மற்றும் தோட்டகலைத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

குறிப்பாக ஆலத்தூர் ஒன்றியத்தில் மூடப்பட்ட கறிக்கோழி பண்ணைகளை ஒப்பந்த அடிப்படையில், குத்தகைக்கு எடுத்துள்ள திருச்சி காந்தி மார்க்கெட்டில் மொத்த வெங்காயம் வியாபாரியும் அரசியல்வாதியுமான ஒருவர் டன் கணக்கில் பெரிய வெங்காயத்தை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. எனினும், அத்தியாவசிய பொருள்கள் பட்டியலில் இருந்து பெரியவெங்காயம் நீக்கப்பட்டதால் பதுக்கல்காரர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டது என்றே சொல்லப்பட்டது.

இந்த நிலையில் , பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீ வெங்கடபிரியா உத்தரவின் பேரில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் டி.எஸ்,பி.,நல்லு தலைமைல் ஆலத்தூர், இரூர், கூத்தனூர், சத்திரமனை, மங்கூன் கிராமங்களில் கோழி பண்ணைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 440 டன் பெரிய வெங்காயத்தை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பெரிய வெங்காயம் கூட்டுறவுத்துறை மூலம், பொது விநியோகத்திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு குறைந்த விலையில் விற்கப்பட உள்ளது.இதுதொடர்பாக , பள்ளக்காட்டுப்புதூரைச் சேர்ந்த பாலாஜி என்ற வெங்காய வியாபாரி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சத்திரமனை கிராமத்தில் வெங்காய மூட்டைகளுடன் லாரி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அதிக லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில் வெங்காயத்தை பதுக்கி வைத்திருந்த பண பிரியர்கள் தற்போது பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் அதிரடியால் கலக்கமடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments