திரையரங்குகளில் தற்போதைக்கு புதிய திரைப்படங்களை வெளியிட இயலாது - பாரதிராஜா

0 4569
திரையரங்குகளில் தற்போதைக்கு புதிய திரைப்படங்களை வெளியிட இயலாது - பாரதிராஜா

தீபாவளிக்கு புது திரைப்படங்களை வெளியிடப் போவதில்லை என்ற முடிவில் உறுதியாக இருப்பதாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் மீண்டும் திட்டவட்டமாக அறிவித் துள்ளது.

இந்த அமைப்பின் தலைவரான இயக்குநர் பாரதி ராஜா வெளியிட்டு உள்ள அறிக்கையில்,  V.P.F கட்டணம் செலுத்துவது தொடர்பாக  பல சுற்று பேச்சு நடத்தியும் சுமூகத் தீர்வு எட்டப்பட வில்லை என சுட்டிக்காட்டி உள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், இனி, தயாரிப்பாளர்களுடன் V.P.F கட்டணம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என உறுதிபட கூறினார். 

புதிய திரைப்படங்களை வெளியிட வில்லை எனில் திரையரங்குகளை மூடிவைக்க நாங்கள் தயார் என்றும் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments