பணத்தை தந்தால் போதும், நடவடிக்கை தேவையில்லை - நடிகர் சூரி தரப்பு
நடிகர் சூரி அளித்த மோசடி புகாரில், நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் டிஜிபியுமான ரமேஷ் குடவாலா முன் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார்.
வழக்கு கடந்த வாரம் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகியோர் தொடர்ந்த முன் ஜாமீன் வழக்குகளின் விசாரணையில் இருந்து தான் விலகுவதாக தெரிவித்து வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார்.
இந்நிலையில், இந்த இரண்டு முன் ஜாமீன் வழக்குகள் இன்று நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தன்னுடைய மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக ரமேஷ் குடவாலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையின் போது, தனக்கு தரவேண்டிய பணத்தை கொடுத்தால் போதும், ரமேஷ் குடவாலா, அன்புவேல்ராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நோக்கம் இல்லை என நடிகர் சூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அன்புவேல் ராஜன் முன் ஜாமீன் மனு மீது பதிலளிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டப்பட்டது.
Comments