அர்ஜெண்டினா அதிபருக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்...
அர்ஜெண்டினா நாட்டு அதிபருக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்திய டிரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அந்நாட்டில், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பியுனோஸ் எரிஸ் நகரின் சாலைகளில் திரண்ட ஆயிரக்கணக்கானோர், தேசிய கொடிகளை கைகளில் ஏந்தி, அதிபர் அல்பர்டோ பெர்ணான்டஸுக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அர்ஜெண்டினா அதிபருக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்... || #Argentina | #AlbertoFernandez | #Protest https://t.co/fmZYIou1rf
— Polimer News (@polimernews) November 9, 2020
Comments