ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் தொலைக்காட்சி நிருபர் வெட்டிக் கொலை; 4 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை

0 16426
ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் தொலைக்காட்சி நிருபர் வெட்டிக் கொலை; 4 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் தொலைக்காட்சி நிருபரை அரிவாளால் வெட்டி கொலை செய்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுநல்லூரை சேர்ந்த மோசஸ் என்பவர் தனியார் தொலைக்காட்சியில் நிருபராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்றிரவு அவரது வீட்டிற்கு சென்ற 4 மர்ம நபர்கள் செய்தி தருவதாக கூறி மோசஸை வெளியே அழைத்து வந்து அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விக்னேஷ் , வெங்கடேஷ், மனோஜ், நவமணி ஆகிய 4 பேரை சோமங்கலம் போலீசார் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments