காற்று மாசு மிகவும் மோசமாக உள்ள நகரங்களில் பட்டாசுகள் வெடிக்க முற்றிலும் தடை- தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்களில் பட்டாசு விற்பனைக்கும் வெடிப்பதற்கும் முற்றாக தடை விதித்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
காற்று மாசு அதிகரிப்பு, கொரோனா பேரிடரை கருத்தில் கொண்டு பட்டாசு வெடிக்க தடை விதிக்க கோரிய வழக்கினை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்தது. டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள தேசிய தலைநகர பகுதியில் இன்று இரவு தொடங்கி, நவம்பர் 30ஆம் தேதி நள்ளிரவு வரை பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு டெல்லிக்கு மட்டுமின்றி, நாடு முழுவதும் காற்றின் சராசரி தரம் மோசம் மற்றும் மிக மோசம் என்ற நிலையில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் பொருந்தும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கூறியுள்ளது. காற்றின் தரம் மிதமான அளவில் உள்ள நகரங்களில், மாசு ஏற்படுத்தாத பசுமைப் பட்டாசுகளை தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற விழாக்களின்போது 2 மணி நேரம் மட்டும் வெடிக்க அனுமதிக்க வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
பிற பகுதிகளை பொறுத்தவரை, பட்டாசுகளுக்கு தடை விதிப்பது அல்லது கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து அந்தந்த பகுதி நிர்வாகங்கள் முடிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசு மிகவும் மோசமாக உள்ள நகரங்களில் பட்டாசுகள் வெடிக்க முற்றிலும் தடை- தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு || #Delhi | #Firecrackers | #Diwali | #NationalGreenTribunal https://t.co/HvteGFCouS
— Polimer News (@polimernews) November 9, 2020
Comments