அரசு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் பாபா கைது
அரசு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், கம்ப்யூட்டர் பாபா என்ற சாமியாருமான நம்தியோ தியாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தூரில் ஆசிரமம் அமைத்துள்ள கம்ப்யூட்டர் பாபா 80 கோடி ரூபாய் மதிப்புள்ள 46 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக புகார் எழுந்தது. அங்கு கட்டப்பட்டிருந்த கட்டடங்கள் நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கப்பட்டன.
அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக நம்தியோ தியாகி மற்றும் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவரின் வீட்டிலிருந்து துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
முன்னதாக தியாகி சிவராஜ் சிங் சவுகான் அமைச்சரவையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments