மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்த குருவியை தட்டி எழுப்பிய ஜோடி குருவி
அயர்லாந்தில் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்த குருவியை மற்றொரு குருவி தட்டி எழுப்பிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லைமரிக் என்ற இடத்தில் வீட்டுத் தோட்டத்தில் நீலக்குருவி ஒன்று மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்தது. இதனைக் கண்ட அதன் ஜோடிக் குருவி அலகால் கொத்தியும், கால்களால் உதைத்தும் அதனை எழுப்ப முயன்றது.
சில விநாடிகளில் மயக்கம் தெளிந்து எழுந்த அந்தப் பறவை நிற்பதற்குத் தடுமாறியது. ஆனாலும் உடனிருந்த ஜோடிப் பறவை விடாமல் அதனை தட்டி எழுப்பி தன்னுடன் அழைத்துச் சென்றது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
Comments