கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளை ஏற்றி வரும் சரக்கு லாரிகள் எண்ணிக்கை அதிகரிப்பு...குறையத் தொடங்கிய காய்கறிகளின் விலை
சென்னை கோயம்பேடு சந்தைக்கு வெளிமாவட்டங்கள், ஆந்திரா, மகாராஷ்ட்ரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து கூடுதலாக சரக்கு லாரிகள் காய்கறிகளை ஏற்றி வந்துள்ளன.
இதனால் கடந்த வாரம் முழுவதும் உயர்ந்து காணப்பட்ட காய்கறிகளின் விலை சற்று குறையத் தொடங்கியுள்ளது. மொத்த விற்பனையில் கடந்த வாரம் 65 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட வெங்காயத்தின் விலை இந்த வாரம் 50 ரூபாயாகக் குறைந்தது.
இதன் காரணாக சில்லறை விற்பனையிலும் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் போன்ற பல காய்கறிவிலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
Comments