கியூபா அருகே கரையை கடந்த ஈட்டா புயல்

0 1178
கியூபா அருகே கரையை கடந்த ஈட்டா புயல்

மத்திய அமெரிக்க நாடுகளை நிலைகுலைய வைத்த ஈட்டா புயல் கியூபா அருகே நேற்று கரையை கடந்தது. 

இதுகுறித்து அமெரிக்க புயல் மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில், தற்போது ஈட்டா புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் தெற்கு முனையை நோக்கி நகர்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.

எனவே, புளோரிடாவின் தெற்குப் பகுதிகள் மற்றும் கீஸ் பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்றும் அந்த மையம் எச்சரித்துள்ளது.

இதற்கிடையில் ஹோண்டூராஸ் நாட்டில் ஈட்டா புயலால் பெய்த மழையால் காணும் இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் வீடிழந்து நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments