ஸ்ரீநகருக்குச் சென்ற கோ ஏர் விமானத்தில் பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவசரத் தரையிறக்கம்

0 1373
ஸ்ரீநகருக்குச் சென்ற கோ ஏர் விமானம் பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவசரத் தரையிறக்கம்

டெல்லியிலிருந்து ஸ்ரீநகர் சென்ற கோ ஏர் விமானத்தில் பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சண்டிகரில் அவசரமாகத் தரையிறங்கியது.

நேற்று காலை 11.30க்கு புறப்பட்ட இந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண் இதய சம்பந்தப்பட்ட பிரச்சினையை சந்தித்ததோடு, அவரது இரத்த அழுத்தம் வெகுவாகக் குறைந்தது.

இதையடுத்து அவசர மருத்துவ உதவிக்காக அந்த விமானம் சண்டிகரில் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சவுதி தலைநகர் ரியாத்தில் இருந்து பெங்களூரு வந்த எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மும்பையில் அவசரமாகத் தரையிறங்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments