காராபாக்கின் முக்கிய நகரத்தை கைப்பற்றியதாக அஜர்பைஜான் அதிபர் அறிவிப்பு
ஆர்மேனியா-அஜர்பைஜான் நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் அங்குள்ள 2வது முக்கிய நகரமான சுஷாவை அசர்பைஜான் ராணுவம் கைப்பற்றி உள்ளது.
இதனை அசர்பைஜானின் அதிபர் இல்ஹாம் அலியேவ் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு தெரிவித்தார்.
இந்த வெற்றியை அசர்பைஜான் நகர வீதிகளில் மக்கள் கைகளில் கொடியேந்தி உற்சாகத்துடன் கொண்டாடினர். நகர் முழுவதும் கார்களில் வலம் வந்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஆனால் இதனை ஆர்மேனியா ராணுவம் முற்றிலுமாக மறுத்துள்ளது. சுஷா நகரில் இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருவதாக ஆர்மேனியா ராணுவம் தெரிவித்துள்ளது.
Comments