ஸ்காட்லாந்தில் கொரோனா பொதுமுடக்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது, இசை வாசிப்பாளர் கீழே தள்ளி விடப்பட்டதால் சர்ச்சை

0 893
ஸ்காட்லாந்தில் கொரோனா பொதுமுடக்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது, இசை வாசிப்பாளர் கீழே தள்ளி விடப்பட்டதால் சர்ச்சை

ஸ்காட்லாந்தில் கொரோனா பொதுமுடக்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது, இசை வாசிப்பாளர் கீழே தள்ளி விடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்பீன் பிரிட்ஜ் என்ற இடத்தில் உள்ள சதுக்கத்தில் பொதுமுடக்கத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றதால், பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

அப்போது பேக் பைப்பர் எனப்படும் குழலிசை வாசிப்பவர், போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே இசைத்தபடி சென்றார்.

அப்போது காவலர் ஒருவர் இசை வாசிப்பாளரை கீழே தள்ளியதால் ஆவேசமடைந்த பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments