டெல்லியில் தீபாவளிக்குப் பட்டாசு விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை!
டெல்லியில் பட்டாசு விற்பனைக்கான அனைத்து லைசன்சுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவைப் பொருத்து அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி மாநகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் மாசு நிலை மிகவும் மோசமடைந்து வரும் நிலையில் 138 பட்டாசு விற்பனையாளர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு தீபாவளிக்கு பட்டாசுகள் விற்க டெல்லி அரசு தடை விதித்துள்ளது.
விதிகளை மீறி பட்டாசு விற்பனை செய்தாலோ வெடித்தாலோ நடவடிக்கை எடுக்கும்படியும் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments