டிரம்பின் திட்டங்களுக்கு மூடுவிழா நடத்த ஜோ பைடன் பரிசீலனை...ஒபாமா ஆட்சியின் திட்டங்களை மீண்டும் கொண்டுவர திட்டம்

0 3486
டிரம்பின் திட்டங்களுக்கு மூடுவிழா நடத்த ஜோ பைடன் பரிசீலனை...ஒபாமா ஆட்சியின் திட்டங்களை மீண்டும் கொண்டுவர திட்டம்

அமெரிக்காவில் டிரம்ப் செயல்படுத்திய திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தவும், ஒபாமா ஆட்சியின் திட்டங்களை மீண்டும் செயல்படுத்தவும் புதிய அதிபராக பதவியேற்கும் ஜோ பைடன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது டிரம்ப்பின் கொள்கைகளை ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில், அதிபராக பதவியேற்றதும், ட்ரம்ப் அமல்படுத்திய பல்வேறு திட்டங்களை ரத்து செய்யவும், ஒபாமா ஆட்சியின் திட்டங்களை பின்பற்றவும் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எச் -1 பி விசாக்கள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவதோடு, நாடு வாரியாக வேலைவாய்ப்பு அடிப்படையிலான விசாக்களுக்கான வரம்பை அகற்றவும் திட்டமிட்டுள்ளார். அடுத்ததாக, குடியேற்றக் கொள்கையில் திருத்தம் மேற்கொண்டு ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு சட்டப்படி அமெரிக்க குடியுரிமை அளிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் 5 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் பயனடைவர்.

13 நாடுகளுக்கு அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்ள ட்ரம்ப் விதித்த தடையை நீக்குவது, பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் வர விதிக்கப்பட்ட, கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது உள்ளிட்டவையும் ஜோ பைடனின் திட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் திறன்மிகுந்த வெளிநாட்டவரை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்துவதுடன், மெக்சிகோ எல்லையில் அகதிகளைத் தடுக்க சுவர் கட்டும் திட்டத்தை கைவிட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சுற்றுச்சூழல் கொள்கை, குடியேற்றம், மருத்துவ காப்பீடு, வர்த்தகம், வரி குறைப்பு, சிவில் உரிமைகள், ராணுவச் செலவுகள் போன்றவற்றில் முந்தைய ஜனநாயகக் கட்சி அதிபரான ஒபாமாவின் திட்டத்தையே பின்பற்ற ஜோ பைடன் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments