பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்புப் பணம் குறைந்து, வரி வசூல் அதிகரித்துள்ளது - பிரதமர் மோடி
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளதாகவும், கருப்புப் பணம் குறைந்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கருப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி ஆயிரம் ரூபாய், ஐந்நூறு ரூபாய் பணத்தாள்கள் செல்லாது என 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் நாளில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
அந்த நடவடிக்கையின் நான்காண்டு நிறைவையொட்டி மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்புப் பணம் குறைந்துள்ளதாகவும், வரி வசூல் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வெளிப்படைத்தன்மை அதிகரித்ததால் நாட்டின் முன்னேற்றத்துக்குப் பெரிதும் பயனுள்ளதாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Comments