சாதாரண மக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்க 2022 வரை ஆகும் - எய்ம்ஸ் இயக்குநர்

0 2865
சாதாரண மக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்க 2022 வரை ஆகும் - எய்ம்ஸ் இயக்குநர்

சாதாரண மக்கள் கொரோனா தடுப்பூசிக்காக 2022 வரை காத்திருக்க வேண்டி வரும் என டெல்லி எய்ம்ஸ் இயக்குநரும், அரசின் கொரோனா தேசிய நடவடிக்கை குழு உறுப்பினருமான ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் இதைத் தெரிவித்துள்ள அவர், புளூவுக்கான தடுப்பூசியை மக்களிடம் கொண்டு சேர்க்க எத்தனை காலம் தேவைப்பட்டதோ, அத்தனை காலம் கொரோனா தடுப்பூசிக்கும் தேவைப்படும் என்றார்.

மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், கொரோனா தடுப்பூசியை மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படும் எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments