சிறை விசாரணை கைதி செல்வமுருகன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் விசாரணை
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் கிளை சிறை விசாரணை கைதி செல்வ முருகன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
பண்ருட்டி அருகே காடாம்புலியூரைச் சேர்ந்த செல்வ முருகன், நெய்வேலியில் பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த 4 ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
போலீசார் சித்திரவதை செய்ததால் தான் செல்வ முருகன் மரணமடைந்தார் என்று குடும்பத்தினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், விருத்தாசலம் கிளை சிறை மற்றும் நெய்வேலி நகர காவல் நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
Comments